முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 அக்டோபர், 2024 at 8:48 PM
பகிர்:

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வைரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா(57). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலையை அடுத்துள்ள கோவில்பட்டி -மணப்பாறை சாலை மேட்டுக்கடை அருகே சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது மணப்பாறையில் இருந்து வந்த சரக்கு ஆட்டோ செல்லையா மீது மோதியது. இதில் செல்லையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →