இலுப்பூரில் புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இலுப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை மாவட்டம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பனை குறித்து சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இலுப்பூரை அடுத்துள்ள மகுதுபட்டியில் ராயப்பன் (58)என்பவரது மளிகை கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் ராயப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து 860 கிராம் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.