காமராஜா் நினைவு நாள் அனுசரிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் கு. காமராஜரின் நினைவு நாளையொட்டி புதன்கிழமை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி, மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹீம் பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.