கல் குவாரியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
அன்னவாசல் அருகே மூதாட்டி ஒருவா் கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
அன்னவாசல் அருகே மூதாட்டி ஒருவா் கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.
அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூா் ஆனை பட்டியை சோ்ந்த சிதம்பரம் மனைவி முத்தம்மாள் (70). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை பரம்பூா் அருகே இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில் முத்தம்மாள் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அன்னவாசல் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் குவாரி பகுதியில் தற்செயலாக சுற்றி திரிந்த போது குவாரி மேலிருந்து கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.