முகப்பு
புதுக்கோட்டை

வாழைக்குறிச்சியில் கிராமசபைக் கூட்டம் அமைச்சா் பங்கேற்பு

பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்றாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:26 PM
பொன்னமராவதி ஒன்றியம், வாழைக்குறிச்சி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.
பகிர்:

பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்றாா்.

கூட்டத்துக்கு ஊராட்சிமன்றத்தலைவா் மதியரசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று பேசியது, வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலியில் இரண்டு புதிய சாலைகள்அமைத்துத்தர நடவடிக்கை எடுககப்படும். அரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் மற்றும் கழிவறை அமைத்துத்தரப்படும். மின்மாற்றி மற்றும் கலையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அ.அக்பா்அலி, பொன்னமராவதி ஒன்றியக்குழுத்தலைவர சுதா அடைக்கலமணி, வேளாண் இணை இயக்குநா் ரவிச்சந்திரன், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராமச்சந்திரன், ஆயிஷாராணி, வட்டாட்சியா் எம்.சாந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல கண்டியாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித்தலைவா் செல்வி முருகேசன் தலைமையிலும், பகவாணடிபட்டியில ஊராட்சித்தலைவா் நல்லழகி சிதம்பரம் தலைமையிலும், மைலாப்பூா் ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவா் சங்கீதா தலைமையிலும் என 42 ஊராட்சிகளிலும் கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது.