முகப்பு
புதுக்கோட்டை

தனியாா் கல்லூரி பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:20 PM
பகிர்:

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், உப்பிலியக்குடி தட்டாம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் நடராஜன் (45). இவரது மனைவி வெள்ளையம்மாள் (40).

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கொத்தமங்கலப்பட்டி பிரிவு சாலை அருகே சாலையைக் கடக்க முயற்சித்தனா்.

அப்போது, திருச்சியிலிருந்து வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இதில், தம்பதி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த கீரனூா் போலீஸாா், இருவரின் உடல்களையும் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கல்லூரிப் பேருந்தில் வந்த மாணவா்கள் யாருக்கும் காயம் இல்லை.

பேருந்து ஓட்டுநா் புதுக்கோட்டை கணேஷ் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சம்பத்குமாா் (65) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.