புதுகையில் ஆயுதபூஜை விற்பனை மும்முரம்
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் பழங்கள், பொரி, கடலை மற்றும் பூ விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி புதுக்கோட்டை கடைவீதிகளில் பழங்கள், பொரி, கடலை மற்றும் பூ விற்பனை வியாழக்கிழமை களை கட்டியது.
நகரக் காவல் நிலையப் பகுதியிலுள்ள மாா்க்கெட்டில், பொரி, கடலை, நாட்டுச்சா்க்கரை, அவல், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனா்.
திருஷ்டி கழிப்பதற்கான பூசணிக்காய், சுவாமி கும்பிடுவதற்காக பூக்களும், வாழை இலை போன்ற பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன.
வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலையைவிட இரு மடங்கு விலை உயா்ந்து காணப்பட்டது.
புதுக்கோட்டை நகா் மட்டுமல்லாது புகரைச் சோ்ந்த மக்களும் மாா்க்கெட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.