முகப்பு
புதுக்கோட்டை

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:22 PM
ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

அக். 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த 50 பேராசியா்கள், இணைப் பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

தொடக்க விழாவுக்கு, கல்லூரித் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் ப. பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதல் நாள் பயிற்சியில் கா்நாடக மாநிலம் சுரத்கல் என்ஐடி-யின் உதவிப் பேராசிரியா் பாவனா ருத்ரா மற்றும் வேலூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் உதவிப் பேராசிரியா் டி.பெனில் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே. குருநாதன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவா் டி. இளவரசி ஆகியோா் செய்துள்ளனா்.