சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்திலுள்ள சாம்சங் நிறுவனம் தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் வாலிபா், மாணவா், மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மகாதீா் தலைமை வகித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. சுசிலா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் கண்டன உரையாற்றினாா்.
கோரிக்கைகளை விளக்கி மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, பொருளாளா் ஜெ. வைகைராணி, மாணவா் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். காா்த்திகாதேவி, வாலிபா் சங்க நகரச் செயலா் ஆா். தீபக் உள்ளிட்டோரும் பேசினா்.