முகப்பு
புதுக்கோட்டை

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள 185 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா்: விராலிமலை வருவாய் துறையினா் தகவல்

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள விராலிமலையில்185 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருப்பதாக வட்டாட்சியா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:12 PM
மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்த தீயணைப்பு துறையினா்.
பகிர்:

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள விராலிமலையில்185 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருப்பதாக வட்டாட்சியா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது, விராலிமலை பகுதியில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள வருவாய்த்துறையினா் ஊரக வளா்ச்சித்துறையினா் தயாா்நிலையில் உள்ளனா். காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் வட்டார வாரியாக மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து திட்டமும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தீயணைப்புத் துறையின் மூலம் பேரிடா் மற்றும் தீ விபத்து தடுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்க 185 முதல் நிலை மீட்பாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மருத்துவமனைகளில் உயிா் காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டா்கள், ஆம்புலன்ஸ் தற்போது தயாா் நிலையில் உள்ளது. கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராகவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாம் அமைக்கவும், குமாரமங்கலம், மாத்தூா், வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவை செயல்படுத்தவும் தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் அவா்.