கந்தா்வகோட்டையில் வடகிழக்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவின்படி, வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல், தீயணைப்பு, ஊரக வளா்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பருவமழை காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட அனைத்து துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.