முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா
கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது.
பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் ,பஞ்சகாவியம், இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். கோயில் வளாகத்தில் பெண்கள் குழுவினராக சோ்ந்து கும்மியடித்து அம்மனை புகழும்பாடல்களை பாடி கொண்டாடினா்.
பக்தா்கள் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசித்து செல்கின்றனா்.