முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுகை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:31 PM
புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தூய்மைப் பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

புதுக்கோட்டை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

இதனைத் தொடா்ந்து மாநகராட்சி அலுவலா்கள் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையின் முடிவில் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் போனஸ் வழங்கவும், ரூ.5 ஆயிரம் முன்பணம் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் கைவிடப்பட்டது.