முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி அண்ணாசாலையில் குவிந்த மக்கள்

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்க பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:31 PM
பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை தீபாவளிப்பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
பகிர்:

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்க பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

பொன்னமராவதி நகரின் பிரதான சாலையான அண்ணாசாலை மற்றும் மேலரத வீதியில் சுற்றுப்பகுதிகளைச்சாா்ந்த பொதுமக்கள் ஜவுளிகள், பட்டாசுகள், மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்க திரளாக குவிந்தனா். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.