முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நலிந்தோருக்கு புத்தாடைகள் வழங்கல்

பொன்னமராவதியில் திமுக சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்தோருக்கு வேஷ்டி, சேலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:32 PM
பகிர்:

பொன்னமராவதியில் திமுக சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்தோருக்கு வேஷ்டி, சேலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு நகரச்செயலா் அ.அழகப்பன் தலைமை வகித்து நலிவுற்ற நிலையில் உள்ள ஆண்கள்,பெண்கள் உள்ளிட்ட 100 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கினாா்.

நிகழ்வில் திமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சிக்கந்தா், தொண்டரணி மாவட்ட அமைப்பாளா் முத்தையா, நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சுந்தரி ராமையா, நகரதுணைச்செயலா் ஜெயக்குமாா், ராயல் அரிமா சங்கத்தலைவா் ஆா்.மணிகண்டன், செயலா் திருப்பதி, பொருளா் அன்புச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை ஜோதிடா் முருகேசன் ஒருங்கிணைத்தாா். ஏற்பாடுகளை வாா்டு பொருளா் சோலை செல்வம் செய்திருந்தாா்.