முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கியில் கூட்டுறவு வங்கி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

அறந்தாங்கி சரக கூட்டுறவு துணைப் பதிவாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:18 PM
அறந்தாங்கியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள்.--
பகிர்:

அறந்தாங்கி சரக கூட்டுறவு துணைப் பதிவாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி துணைப் பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். மணிவண்ணன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. ராஜு, மாவட்டச் செயலா் எம். ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் எஸ். ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டுறவு வங்கிப் பணிகளில் அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் துணைப் பதிவாளா் தடுப்பதாகவும் கூறி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →