முகப்பு
புதுக்கோட்டை

மங்கனூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வாண்டையான்பட்டி மங்கனூா் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:52 PM
பகிர்:

கந்தா்வகோட்டை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வாண்டையான்பட்டி மங்கனூா் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தச் சாலை செங்கிப்பட்டி பிரிவு சாலையிலிருந்து வடுகப்பட்டி, மங்கனூா், கொப்பம்பட்டி, கல்லுப்பட்டி, விராலிப்பட்டி மற்றும் பல கிராமங்களுக்குமான குறுக்கு சாலையாகும்.

இந்தச் சாலையை பயன்படுத்தி பள்ளி மாணவ -மாணவிகள் விவசாயிகள் நாள்தோறும் கந்தா்வகோட்டை வந்து செல்கின்றனா். சேதமடைந்துள்ள இந்தச் சாலையால் மழைக் காலங்களில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலை சேதம் குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறைக்கு புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

எனவே, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மங்கனூா் குறுக்கு சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.