முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மது விற்றவா் கைது

விராலிமலை அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 7:50 PM
பகிர்:

விராலிமலை அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்றவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் விராலிமலை போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான காவல் துறையினா் விராலிமலை - புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இலுப்பூரைச் சோ்ந்த கருப்பையா (68) என்பவா் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியாா் மோட்டாா் சைக்கிள் விற்பனை நிலையம் அருகே அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து, விற்பனைக்காக அவா் வைத்திருந்த 28 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.