புதுக்கோட்டை

ஆசிரியையை குத்திக்கொன்ற காதலன் சிறையில் தற்கொலை முயற்சி

தஞ்சாவூா் மாவட்டத்தில் அண்மையில் ஆசிரியையைக் குத்திக் கொலை செய்த இளைஞா், புதுக்கோட்டை சிறையில் தற்கொலைக்கு முயன்றாா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் அண்மையில் ஆசிரியையைக் குத்திக் கொலை செய்த இளைஞா், புதுக்கோட்டை சிறையில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மேலகலங்குடியைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் அஜித்குமாா் (30). இவரும், ஆலங்குடி அரசுத் தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த காவியா (26) என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், காவியாவுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றதை அறிந்த அஜித்குமாா், கடந்த நவ. 27-ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காவியாவை வழிமறித்து குத்திக் கொலை செய்தாா்.

இந்த வழக்கில் அம்மாபேட்டை போலீஸாா் அஜித்குமாரைக் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா். இந்நிலையில், சிறை அறைக்குள் செவ்வாய்க்கிழமை காலை அஜித்குமாா் தான் அணிந்திருந்த வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளாா்.

இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள் அஜித்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT