புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்தாா்.
உலகளாவிய சவால்களுக்கு உள்ளூா் அளவிலான தீா்வுகள் என்ற தலைப்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏற்கெனவே ஒன்றிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு தோ்வு செய்யப்பட்ட 111 போ் மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் பங்கேற்றனா்.
அறிவியல் சோதனைகள், மாதிரிகள், செயல் திட்டங்களை இந்த மாணவா்கள் சமா்ப்பித்தனா். சிறந்த மூன்று படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன.
ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட அலுவலா் செந்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாதம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.