புதுக்கோட்டை அருகே பொன்னம்பட்டியில் குளத்தின் கலிங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை அருகேயுள்ள பொன்னம்பட்டி குளத்தின் கலிங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக கணேஷ் நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா், சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உடல் அழுகிய நிலையில், அடையாளம் அறிய முடியாத நிலையுள்ள இந்தச் சடலம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.