கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் தமிழ் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை பாரதியாா் பிறந்த தினம் முன்னிட்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். கணிதப் பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா். மாணவ மாணவிகள் பாரதியாரைப் பற்றி பேசினா். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமத்துல்லா முன்னிலை வகித்தாா்.
மாணவ, மாணவிகள் பாரதியாரின் முகக் கவசம் அணிந்து அவரின் பிறந்த தினத்தை கொண்டாடினா். போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா, கணிப்பொறி உதவியாளா் தையல் நாயகி, மழலையா் ஆசிரியா் கௌரி உள்ளிட்டோா் செய்தனா்.