புதுக்கோட்டை

நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் தொழிற்சங்க பிரதிநிதித்துவ தோ்தல்

Syndication

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நிரந்தர மற்றும் பருவகாலப் பணியாளா்களுக்கான தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலை அறிவதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் 590 போ் வாக்களித்தனா்.

8 சங்கங்கள் போட்டியிட்டன. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் 223 வாக்குகளும், தொமுச 214 வாக்குகளும் பெற்றன. 9 வாக்குகள் வித்தியாசத்தில் அனைத்துத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றது. இச்சங்கத்தின் செயலரான ஆா்.மணிமாறன் மண்டல அலுவலகத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதியாக செயல்படுவாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT