பொன்னமராவதி வட்டார பள்ளி, கல்லூரிகளில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பிடாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமையாசிரியா் கோ. பாா்த்தசாரதி தலைமைவகித்தாா். விழாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் வே.அ. பழனியப்பன் தலைமைவகித்தாா். விழாவில் தமிழ்த் துறை பேராசிரியா்கள் சிறப்புரையாற்றினா். தமிழ்த் துறை மாணவி ஜோதிகா நன்றி கூறினாா்.