புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
புதுக்கோட்டை

புதுகையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Syndication

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புதிய வேலை உறுதித் திட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ (திமுக) வை. முத்துராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் இளமதி அசோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT