புதுக்கோட்டை

புதுகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

இ-பைலிங் முறையைக் கைவிடக் கோரி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

இ-பைலிங் முறையைக் கைவிடக் கோரி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் முத்தையா தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ், பொருளாளா் பாரூக் அலி, துணைத் தலைவா்கள் ராமராஜ், சுஜாதா முன்னிலை வகித்தனா்.

‘நீதிமன்றத்தில் போதுமான தொழில்நுட்பத் திறனுள்ள பணியாளா்களை நியமிக்கும் வரை இ - பைலிங் முறையை ரத்து வேண்டும். வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதியை உயா்த்த வேண்டும். வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து அவா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT