புதுக்கோட்டை

திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்

Syndication

புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆவுடையாா்கோவில் ஒன்றியம் விளானூா் ஊராட்சி வெளியாத்தூா் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டதை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசுத் துறை அலுவலங்களில், தமிழக இளைஞா்களின் வேலையைப் பறித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜன. 5-ஆம் தேதி புதுக்கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, என். முத்துலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாவட்டப் பொறுப்பாளா் மா. திலகா், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் இரா. ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், ஜான்போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: தமிழருவி மணியன்!

வாசுதேவநல்லூா் ஆஞ்சனேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT