புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச. 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைதேடுவோா் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வரும்போது, தங்களின் அனைத்து வகையான கல்வி, ஜாதிச் சான்றுகளுடன் சுய விவரக் குறிப்பு, புகைப்படம், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.