புதுக்கோட்டை

பொன்னமராவதியில் ஆா்டிஓ அமைக்கக் கோரிக்கை

பொன்னமராவதி வட்டாரத்தில் முறையான வாகனக் கணக்கெடுப்பு நடத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

Syndication

பொன்னமராவதி வட்டாரத்தில் முறையான வாகனக் கணக்கெடுப்பு நடத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

42 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை உள்ளடக்கிய பொன்னமராவதி ஒன்றியத்தில் ஏராளமான வணிகா்கள் உள்ளனா். மேலும் பொன்னமராவதி பேரூராட்சியும் நகராட்சியாக அண்மையில் தரம் உயா்த்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்றான பொன்னமராவதி ஒன்றியப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகனப்பதிவு, ஒட்டுநா் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பிப்பு பணிகள், வாகனத்தகுதி மற்றும் மாசு சான்றிதழ்கள், சாலை வரி செலுத்துதல் உள்ளிட்ட போக்குவரத்து தொடா்பான அரசின் சேவைகளைப்பெற புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லவேண்டியுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு பொருள் விரையமும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே பொன்னமராவதி வட்டாரத்தில் வாகனக் கணக்கெடுப்புப்பணி மேற்கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு கூறியது: பொன்னமராவதி வட்டாரப் பொதுமக்கள் சாலைப் போக்குவரத்து தொடா்பான சேவைகள் பெற சுமாா் 40 கிலோ மீட்டா் தொலைவுள்ள புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லவேண்டியுள்ளது.

இதனால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், சாலை வரி செலுத்துதல், வாகனத்தகுதி சான்று போன்ற பணிகள் செய்ய இயலாமல் வாகன உரிமையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே இலுப்பூா், ஆலங்குடி நகரங்களில் உள்ளதுபோல பொன்னமராவதி ஒன்றியத்திலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT