கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாதவிடாய் சுகாதாரம், மன நலத்திட்ட பயிற்சி குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் தலைமைவகித்தாா். கந்தா்வகோட்டை வட்டார இயக்க மேலாளா் பவுல்தாஸ் வழிகாட்டுதலின் படி, வட்டார வளப் பயிற்றுநா் த. சுமதி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், அக்காலகட்டங்களில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், பராமரிப்பு, மன அழுத்தம், உடல்நலம், துரித உணவுகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினாா்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி.செல்வகுமாா் செய்திருந்தாா்.