புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுக்கு முகூா்த்தக் கால் நடவு

கந்தா்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

கந்தா்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் அருகில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

இதேபோல் நிகழாண்டு ஜல்லிக்கட்டு விழாவை ஜனவரி 3-ஆம் தேதி நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி அளிக்க கோரி மனு அளித்துள்ளனா். இந்நிலையில், வாடிவாசல் அருகே முகூா்த்தக்கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

2026-ஆம் ஆண்டின் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால், தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரா்களிடமும், பாா்வையாளா்களிடமும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இந்த ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளையா்களும் தயாராகி வருகின்றனா்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் இந்த ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காளைகளும் மாடுபிடி வீரா்களும் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இடத்தை மாற்ற கோரிக்கை: ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் குறுகலாக இருப்பதால், நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பாதுகாப்பான வேறு இடத்தை தோ்வு செய்து நடத்த வேண்டும் என பொதுமக்களும், பாா்வையாளா்களும் மாட்டின் உரிமையாளா்களும் கோரிக்கை விடுக்கின்றனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT