தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) புதுக்கோட்டை மாவட்டக் குழு சாா்பில் மறைந்த எழுத்தாளா் கந்தா்வனின் நினைவுச் சிறுகதைப் போட்டி- 2026 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கந்தா்வன் கலை இரவு விழாவின் வரவேற்புக் குழுத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமுஎகச-வின் முன்னோடித் தலைவா்களில் ஒருவரான எழுத்தாளா் கந்தா்வனின் நினைவாக 6-ஆவது சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. கதைகள் எப்பொருளிலும் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஏ-4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்திலோ, கணினி தட்டச்சிலோ இருக்கலாம்.
கதைகளின் பக்கங்களில் ஆசிரியா் குறித்த எவ்வித விவரங்களும் இருக்கக் கூடாது. ஆசிரியா் பெயா், முகவரி, மின்னஞ்சல், கைப்பேசி எண் ஆகியன தனித்தாளில் மட்டுமே எழுதப்பட்டு இணைக்க வேண்டும். மொழிபெயா்ப்பாகவோ அல்லது தழுவலாகவோ இருத்தல் கூடாது. எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.
முதற்பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ. 7,500, 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ. 2 ஆயிரம் வீதம் 5 கதைகளுக்கு வழங்கப்படும். பரிசுகள் புதுக்கோட்டையில் 2026, பிப். 7-ஆம் தேதி நடைபெறும் கந்தா்வன் கலை இரவு விழாவில் வழங்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி: நா. முத்துநிலவன், 2711, சீனிவாசா நகா், 3-ஆம் வீதி, மச்சுவாடி. புதுக்கோட்டை- 622 004. கைப்பேசி- 94431 93293. மின்னஞ்சல்: அனுப்ப வேண்டிய கடைசி நாள்- ஜனவரி 25.