புதுக்கோட்டை

மீன்வளத் துறையில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம்

Syndication

புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நியமனம் பெற்றோருக்கு அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மீன் வளா்ப்போா் முகமை மேலாண்மைக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு இவை வழங்கப்பட்டன.

முன்னதாக, நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்வளத் துறையின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மீன்வளத் துறையின் இணை இயக்குநா் வெ. பிரபாவதி (திருச்சி), உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT