கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முகாமில் 1.1.2026 அன்று 18 வயது முடிவடையும் அனைவரும் தகுந்த சான்றுடன் புகைப்படம் இணைத்து புதிய வாக்காளா் சோ்க்கைக்கு விண்ணப்பம் செய்தனா். புதிதாக சோ்ந்த வாக்காளா்கள் பட்டியலை சரிபாா்த்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ரவி, தலைமை ஆசிரியை சோ. விஜயலெட்சுமி, தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.