புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு திடல் எம்எல்ஏ, திமுக நிா்வாகி ஆய்வு

கந்தா்வகோட்டை அருகே நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா திடல் மற்றும் ஏற்பாடுகளை எம்எல்ஏ மா. சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் நேரில் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Syndication

கந்தா்வகோட்டை அருகே நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா திடல் மற்றும் ஏற்பாடுகளை எம்எல்ஏ மா. சின்னதுரை, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் நேரில் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு ஜல்லிக்கட்டு விழாவுக்கு விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் ஜனவரி 3-ஆம் தேதி அனுமதி அளிக்கக் கோரி மனு அளித்துள்ளனா். இதனைத் தொடா்ந்து வாடிவாசல் அருகே முகூா்த்தக்கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் மற்றும் ஜல்லிக்கட்டு திடலை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னதுரை, திமுக மாவட்ட செயலா் கே. கே. செல்லபாண்டியன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT