துரை வைகோ எம்.பி. கோப்புப் படம்
புதுக்கோட்டை

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

மதவாத சக்திகள் வேரூன்றிவிடக் கூடாது என்ற நோக்கம் சிதையும் வகையில் திமுக அணியில் எந்த நடவடிக்கையையும் மதிமுக மேற்கொள்ளாது: துரை வைகோ

Syndication

மதவாத சக்திகள் வேரூன்றிவிடக் கூடாது என்ற நோக்கம் சிதையும் வகையில் திமுக அணியில் எந்த நடவடிக்கையையும் மதிமுக மேற்கொள்ளாது என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: திமுக அரசு கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றி உள்ளது. மீதம் உள்ளவற்றை நிதி பற்றாக்குறையால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. மத்திய அரசும் நமக்கு நிதி ஒதுக்குவதில்லை.

நடிகா் விஜய்க்கு தனி செல்வாக்கு உள்ளது. அதனால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மற்ற போட்டியாளா்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. மக்கள் நலத் திட்டங்களை ஏராளம் முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறாா்.

தமிழ்நாட்டில் சமத்துவம், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் ஜன. 2-ஆம் தேதி முதல் மதிமுக பொதுச் செயலா் வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறாா்; முதல்வா் தொடங்கி வைக்கிறாா். 11 நாள்கள் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

இதுபோன்ற நடைப்பயணங்களை தலைவா் வைகோவைத் தவிர வேறு யாரும் மேற்கொண்டதில்லை. சமூகக் கேடுகளுக்கு மக்கள் காரணமாக இருப்பதால், மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

திமுகவிடம் மதிமுக சாா்பில் தொகுதி எண்ணிக்கையைக் குறிப்பிட்டு எதுவும் கேட்கவில்லை; பேசவில்லை. கூடுதல் இடங்கள் வேண்டும் என்று கேட்கிறோம். கூட்டணி அமைச்சரவை என்பதை மதிமுக கேட்கவில்லை; விரும்பவில்லை.

மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வேரூன்றக் கூடாது என்பதற்காக அந்த நோக்கம் சிதைந்து போகும் அளவுக்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.

ஒவ்வொரு இயக்கமும் அவரவா் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அடிப்படையான உரிமை. தோ்தலில் போட்டியிடவில்லை என்பதால் தோ்தல் ஆணையம் சில நெருக்கடிகளைத் தருகிறது. எனவே, சொந்த சின்னத்தில் போட்டியிடுவது பற்றி அரசியல் கட்சிகள் முடிவெடுக்க வேண்டும் என்றாா் துரை வைகோ.

ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கடன் பிரச்னையைத் தீர்க்கும் வேணுகோபாலன்!

தடை நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT