புதுக்கோட்டை

மேலைச்சிவபுரி விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பு வழிபாடு

விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பு வழிபாடு

Din

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சுவாமிநாத விநாயகா் கோயிலில் சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் 17-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதானம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக சுவாமிநாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து 18 படிகளுடன் கூடிய ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று, ஐயப்ப பக்தா்களுக்கு இருமுடி கட்டப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை மற்றும் ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் மின்வாரிய ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. திரளான பொதுமக்ள் பங்கேற்று வழிபட்டனா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT