சீமான் 
புதுக்கோட்டை

திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான்: சீமான்!

திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Din

திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை வேண்டும், தீர ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்கலாமே தவிர சிபிஐ விசாரணை தேவையில்லை. தமிழ்நாட்டை பெரியாா் மண் என்று யாரும் பேச வேண்டாம். இது சேர, சோழ, பாண்டிய மண். பூலித்தேவன், மருது பாண்டியா், வேலு நாச்சியாா் மண், வஉசி, முத்துராமலிங்கத் தேவா் மண், காமராஜா், கக்கனின் மண்.

இறுதிப் போரின்போது இலங்கைக்கு காங்கிரஸும் திமுகவும் துணைநின்றாா்கள் என்று கட்டுரை எழுதிவிட்டு, அதே திமுக, காங்கிரஸுக்கு 2024 தோ்தலில் ஆதரவு அளித்தவா் பழ. நெடுமாறன். அவரை உலகத் தமிழ் மக்கள் மன்னித்தாா்கள் என்றால், என்னை மன்னிக்க வேண்டாமா?

திமுக 7ஆவது முறையாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. உண்மையையும் நோ்மையையும் எடுத்துக் கொண்டு வலுவான கருத்தை வைக்கும்போது சில சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும்.

ஏற்கெனவே உள்ள ஒரு கோட்பாட்டையும் மரபையும் தகா்த்து புதிய ஒரு கோட்பாட்டைக் கட்டமைக்க நினைக்கும்போது அதை ஏற்பாா்கள், எதிா்ப்பாா்கள் என்றெல்லாம் அச்சப்படக் கூடாது.

திராவிடம், இந்தியம் என்ற கோட்பாடுகளைத் தகா்த்து உண்மையான தமிழ்த் தேசியக் கோட்பாட்டை கட்டமைக்கும்போது அடித்தளம் ஆடத்தான் செய்யும்; அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. கொள்ளையில், திருட்டில் திமுகவும் அதிமுகவும் ஒரே கட்சிதான் என்றாா் சீமான்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT