விபத்துக்குள்ளான பேருந்து. 
புதுக்கோட்டை

விராலிமலை அருகே அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் காயம்!

அரசுப் பேருந்து விபத்தில் சிக்கியது பற்றி...

DIN

விராலிமலை: விராலிமலை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர், பெண்கள் உள்பட 19 பயணிகள் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து கீரனூர் நோக்கி சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து (கே 9) இன்று காலை சென்று கொண்டிருந்தது.

காயமடைந்தவர்கள்.

இந்தப் பேருந்து ஆவாரங்குடி பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பேருந்து கற்கள் மீது ஏறி நின்றது.

பயணிகளின் அலறல் சப்தத்தைக் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பியதை தொடர்ந்து நிகழ்வு இடத்துக்கு நான்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது.

காயமடைந்தவர்களை மீட்டு கீரனூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீரனூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக சிறிய காயங்களுடன் பயணிகள் உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைத்திருநாள் வந்தாச்சு! தமிழகமெங்கும் பொங்கல் கொண்டாட்டம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! களமிறங்கி கலக்கும் காளைகள்!

விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ. 111 கோடி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஒகேனக்கல் வனப்பகுதியில் மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலி!

மண்ணும் மனிதர்களும்... அங்கோலா

SCROLL FOR NEXT