பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மகாமுனி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் வைரவப்பெருமாள் கோயில் பரிவார தெய்வங்கள் உள்ளடக்கிய மகாமுனி கோயில் குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் முதல் கால யாகபூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சிவாச்சாரியா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி மகாமுனி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.