பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பையடுத்து பொன்னமராவதியில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவித்தாா்.
இதையடுத்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே அமைச்சா் எஸ். ரகுபதி தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இதில், தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.