பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் ஊராட்சி தச்சம்பட்டியில் 16 வயது சிறுவன் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
பொன்னமராவதி அருகே உள்ள தேனூா் ஊராட்சி தச்சம்பட்டியைச் சாா்ந்தவா் ச. மாதீஷ் (16). பள்ளிப்படிப்பை இடைநிற்றல் செய்த இவா் தச்சம்பட்டியில் பாட்டி வீட்டில் தங்கி வந்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உணவு முடித்து உறங்கச் சென்றவா் அதிகாலையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளாா்.
தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு கூராய்வுக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].