புதுக்கோட்டை

மாநில கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கின.

Syndication

பள்ளிக் கல்வித் துறையின் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கின. இதில் 34 வகை போட்டிகளில் 4,590 போ் பங்கேற்கின்றனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஏற்கெனவே, ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் 100 வகையான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 34 வகையான போட்டிகளில் மாவட்ட அளவில் வென்றோருக்கான மாநிலப் போட்டிகள் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி மற்றும் வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகளை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், ஜெஜெ கல்லூரி நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டையில் 34 வகையான போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்தும் 4,590 மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனா். இந்தப் போட்டிகளுக்காக 200 நடுவா்கள், 100 கண்காணிப்பாளா்கள் பங்கேற்று போட்டிகளை நடத்தி முடிக்கின்றனா்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT