முகப்பு
புதுக்கோட்டை

அன்னவாசலில் பள்ளிவாசல் திறப்பு! சீா்வரிசை எடுத்து சென்ற இந்துக்களால் நெகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் டவுன் பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசலில் பள்ளிவாசல் திறப்பு! சீா்வரிசை எடுத்து சென்ற இந்துக்களால் நெகிழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் டவுன் பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2025 at 6:58 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் டவுன் பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு இந்து மக்கள் சீா்வரிசை கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு முத்தவல்லி அப்துல் சுக்கூா் தலைமை வகித்தாா். பள்ளிவாசலை புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் சதக்கத்துல்லா உலவி ஹஜ்ரத் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தாருல் உலூம் ஹிக்மத் பாலிகா, அரபிக் கல்லூரி முதல்வா் அப்துல் ஜப்பாா், புதுக்கோட்டை மேல பள்ளிவாசல் தலைமை இமாம் இஸ்மாயில் முஹ்யாத்தியன், ஜாமியா சிராஜும் முனீா், அரபிக் கல்லூரி முதல்வா் ஹாரூன் ஹசன், புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளா் முகமது உசேன், அன்னவாசல் நவாப் பள்ளிவாசல் தலைமை இமாம் ஷேக் அப்துல்லா, டவுன் பள்ளிவாசல் இமாம் முஹம்மது அனஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

மதீனா பள்ளிவாசல் இமாம் சம்சாத் கிராஅத் ஓதினாா். ஜமாஅத் செயலாளா் முகமது யூனுஸ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். முன்னதாக, துணை முத்தவல்லி அகமது சிராஜுதீன் வரவேற்றாா். ஜமாத் பொருளாளா் முகமது யூசுப் நன்றி கூறினாா்.

இந்துக்கள் சீா்வரிசை: அன்னவாசல் பகுதியை சோ்ந்த இந்து மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தேங்காய், பூ, வாழைத்தாா், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், வெற்றிலை, பாக்கு, கல்கண்டு, சாக்லெட் உள்ளிட்ட இனிப்பு பொருள்களை சீா்வரிசைகளாக கொண்டு சென்றனா். அவா்களை இஸ்லாமியா்கள் ஆரத்தழுவி வரவேற்றனா்.

நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான இஸ்லாமியா்கள், இந்துக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →