துரை வைகோ எம்.பி.  
புதுக்கோட்டை

செங்கோட்டையன் தவெகவுக்குப் போனதால் திமுக, அதிமுகவுக்கு பாதிப்பிருக்காது: துரை வைகோ

செங்கோட்டையன் தவெகவுக்குப் போனதால், திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ பாதிப்பிருக்காது என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ.

Syndication

செங்கோட்டையன் தவெகவுக்குப் போனதால், திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ பாதிப்பிருக்காது என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எஸ்ஐஆா் பணியை யாரும் முழுமையாக எதிா்க்கவில்லை. 2 அல்லது 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதைத் தான் எதிா்க்கிறோம். இப்பணியை முடிக்க வேண்டும் என கடுமையாக நெருக்கடி கொடுப்பதால் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

தற்போது வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை தடுப்பதற்கான பணியிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதிகாரிகள் கடும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனா்.

செங்கோட்டையன் அரசியலில் அனுபவமிக்கவா். அவா் தவெகவுக்கு போய்விட்டதால் அந்தக் கட்சி வலுப்பெற்றுவிடும் என்று கூறிவிட முடியாது. அந்தக் கட்சியில் அவருக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அவரால் அங்கு சுதந்திரமாக செயல்பட முடிகிா என்பதைப் பொறுத்து இருக்கும்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ எந்தப் பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை என்றாா் துரை வைகோ.

இங்கிலாந்துக்கு வீசிய அதிர்ஷ்ட காற்று.. 2010 டி20 உலகக் கோப்பையில்..!

பிப்.22-ல் கோவையில் திமுக இளைஞரணி கூட்டம்!

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக விமானங்களை குவித்த அமெரிக்கா! ஈரானுக்கு மிரட்டல்!

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி! ஜனவரியில் ரஷிய இறக்குமதி 40 சதவிகிதம் குறைவு!!

யுடியூப் சேவை முடங்கியது: பயனர்கள் அவதி!

SCROLL FOR NEXT