ஏப். 10-இல் புதுகையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு மனு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.10-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.10-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தவெக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். குறிப்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் கே.எம். சரீப், தவெகசாா்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறாா்.
தவெக மத்திய மாவட்டச் செயலரும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினருமான ஜா. முகமது பா்வேஸ் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். முன்னாள் அதிமுக அமைச்சா் என். சுப்பிரமணியன் கந்தா்வகோட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறாா்.
Advertisement
இந்தச் சூழலில் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து ஏப். 10-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்வதற்காக தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.