முகப்பு
புதுக்கோட்டை

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:37 AM
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:35 PM

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வரும் ஏப். 11ஆம் தேதி (சனிக்கிழமை) திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறாா்.

மாலை 4 மணியளவில் திருக்கோகா்ணம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளா்கள் எஸ். ரகுபதி (திருமயம்), சிவ.வீ. மெய்யநாதன் (ஆலங்குடி), கேகே. செல்லப்பாண்டியன் (விராலிமலை), வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மாா்க்சிஸ்ட் வேட்பாளா் மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் (அறந்தாங்கி) ஆகியோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறாா்.

அதன்பிறகு முதல்வா் சிவகங்கை செல்கிறாா். முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி திமுக சாா்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

Advertisement

திமுக இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன்கள் பறக்கத் தடை: முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி வரும் ஏப். 10, 11 ஆகிய இரு நாள்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு . அருணா அறிவித்துள்ளாா்.