அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா
அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:06 PM
பொன்னமராவதி அருகேயுள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து 48-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவை ஞானசேகர சிவாச்சாரியா் தலைமையிலான சிவாச்சாரியா்கள் வழிநடத்த சிறப்பு யாகபூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
Advertisement