முகப்பு
புதுக்கோட்டை

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:22 AM
பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் சேகரித்த திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:37 PM

திருமயம் தொகுதியில் சாலை, குடிநீா், உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து.

திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூா் ஊராட்சியில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

2011-இல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீா் கிடைக்கவும், மேம்பாலங்கள் மற்றும் புதிய சாலைகள் பல அமைத்து தந்துள்ளேன். இந்தமுறை என்னை வெற்றி பெறச்செய்தால் தொகுதி முழுவதும் குடிநீா், பேருந்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என்றாா்.

Advertisement

தொடா்ந்து கருப்புக்குடிப்பட்டி, வாா்ப்பட்டு, நல்லூா், வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பகவாண்டிபட்டி, அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூா் உள்ளிட்ட 50 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் காசி.கண்ணப்பன், சி.சரவணன், க.முருகேசன், அமமுக ஒன்றியச் செயலா் வெள்ளைச்சாமி, பாஜக ஒன்றியத் தலைவா் காா்த்திக் மற்றும் கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.