முகப்பு
புதுக்கோட்டை

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் எஸ்.ரகுபதி

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா் எடப்பாடி பழனிசாமி, அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது என்றாா் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 12:41 AM
பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் புதன்கிழமை, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 7:28 PM

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா் எடப்பாடி பழனிசாமி, அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது என்றாா் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை, திமுக சாா்பில் நடைபெற்ற பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் விடியல் விருந்து விழாவை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் மேலும் பேசுகையில், கரோனா கால கட்டத்தில் ரூ. 5,000 நிவாரண நிதி வழங்க திமுக வலியுறுத்தியபோது அரசிடம் நிதியில்லை எனக்கூறி ரூ.1,000 வழங்கினாா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4,000 நிவாரண நிதி வழங்கினோம்.

Advertisement

பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறாா் எடப்பாடி பழனிசாமி, அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது.

ஆனால் பல விமா்சனங்களை கடந்து திமுக அரசு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது. எனவே, திராவிட மாடல் அரசு தொடர ஆதரவு அளிக்கவேண்டும் என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து பேரூராட்சியின் பல்வேறு வாா்டுகளை சாா்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

விழாவில் தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், துணைத் தலைவா் கா.வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.